மக்களை அடகு வைத்து நாட்டினை சிந்திக்காமல் மற்றும் மக்களை சிந்திக்காமல் செயல்படுகின்ற அராஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .என யாழில் இன்றைய தினம் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுட்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மற்றும் இதனுடன் இணைந்து ஈடுபட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தனர் .
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ;
இலங்கை வரலாறு காணத மிகப்பெரிய துயரத்தினை மக்கள் அனுபவித்து வருகின்றனர் .இன்னும் சில மாதங்களில் பட்னி சாவு வரக்கூடிய அவலத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது.
இந்த தற்போதைய கொடுங்கோலாட்சியின் அதிகாரம் எங்களை இன்று வீதியில் இறக்கி விட்டுள்ளது .
பொருளாதாரத்திற்கும் ,எரிபொருளுக்கும் வீடுகளை விட்டு நாள் தோறும் வீதியிலே காத்திருக்கக் கூடிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் .
இது தொடர்ந்து இடம்பெற்றால் எமது இளம் சந்ததியினர் வீதியிலே செத்து மடிகின்ற துர்ப்பாக்கிய நிலையில் நின்றுகொண்டிருக்கின்றோம் .
கண்களை மூடிக்கொண்டு எங்களுக்கு தேவையானது கிடைத்தால் போதும் என்று வீதியிலே நின்றால் மட்டும் போதாது இந்த கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் எங்களை அடகு வைத்து நாட்டினை சிந்திக்காமல் மற்றும் மக்களை சிந்திக்காமல் செயல்படுகின்ற அராஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .
கள்வர்களுக்கு கீழ் வாழ முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர் .இதன் விளைவாக நாடு முழுவதும் மக்கள் தங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் .
ஆகவே இந்த நாடிட்டினை மீட்கும் வரையிலும் நீதி கிடைக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் . போராட்ட மக்களுக்காக தொடர்ந்து கரம் கொடுப்போம் என தெரிவித்தனர்.





