கிளிநொச்சி மாவட்ட அரச பணியார்களுக்கு இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது .இது தொடர்பாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர Dr . சரவணபவன் மற்றும் சுகாதார சேவைகள் உத்தியோகத்தர் கூறுகையில் ;
கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகம் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வழங்கப்பட்டது .நெருக்கடியின் மத்தியிலும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது .இருந்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு எரிபொருளினை பெற முடியவில்லை .
எதிர் வரும் காலங்களில் ஒழுகுபடுத்தப்பட்ட முறையில் சுகாதார பணியர்களுக்கு வழங்கப்படும் என நம்புகின்றோம் .
எரிபொருள் நிலையத்தில் மக்கள் நெரிசல் இருந்தபோதிலும் முடிந்தளவுக்கு தேவையான எரிபொருளினை பெற்று பூர்த்திசெய்யக்கூடியதாக உள்ளது .
எரிபொருள் போதியளவு கிடைக்கா விட்டாலும் ஓரளவிற்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் நிர்வாகம் சரியான முறையில் வழிப்படுத்துயுள்ளார்கள் .
கிளிநொச்சி பொலிஸார் இன்று குழப்பம் புரிபவர்களை கட்டுப்படுத்தி மக்களுக்கு சீரான முறையில் எரிபொருளினை விநியோகிப்பதில் ஈடுபட்டிருந்தனர் என்றனர் .







