நாட்டில் இப்படியும் சில மனிதர்கள்!(படங்கள் இணைப்பு)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து வருகின்றது.

கடந்த சில மாதங்களாக தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பவற்றால் மக்கள் தமது குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்வதில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் உருகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவரால் அவரது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களது பசியை போக்கியுள்ளார்.

நாட்டில் பல்வேறு வழிகளில் ஏமாற்றி திரியும் சிலருக்கு மத்தியில் இப்படியும் நல்ல உள்ளங்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply