காங்கேசன்துறை படகு சேவை; பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த படகு சேவை மூலம் தேவை யான மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம்,பால்மா,மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply