கிளிநொச்சியில் வலுக்கும் போராட்ட பேரணி! பெருமளவான சுகாதார ஊழியர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் முன் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தனிநபர்களால் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதனை கண்டித்தே குறித்த போராட்டம் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply