இலங்கையில் அத்தியாவசிய 200 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையில் தற்போது, சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.

Leave a Reply