சமையலறையின் புலம்பல்களை ஒழிக்க அனைத்து பெண்களும் அணித்திரளுங்கள்! சமன்மலி குணசிங்க

சமையலறையின் புலம்பல்களை இல்லாமல் ஒழிப்பதற்காக அனைத்து பெண்களையும் அணித்திரளுமாறு உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் செயலாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது வீடுகளின் சமையலறைகளையே பெரிதும் பாதித்துள்ளது என்று உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் செயலாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடியாக மாறியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை.

நாட்டில் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்த இந்த அரசாங்கத்திடம் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பதில்கள் இல்லை.

பிரச்சினைகளுக்கான தீர்வு மக்களிடமே உள்ளது. அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு பெண்கள் வீதிக்கு இறங்க வேண்டும்.

இதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இளம் யுவதிகள் வீதிக்கு இறங்க வேண்டும்.

எனவே சமையலறையின் புலம்களை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூலை 03ஆம் திகதிவரை ஒருவாரத்துக்கு நாட்டின் சகல பாகங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பெண்கள் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும்.

சமூகத்தில் மாற்றமொன்றை காணப்பதற்கான இந்த சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

பெண்கள் ஒரு நாளைக்கு வீதிக்கு இறங்கினால் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும்.

வீடுகளில் தனித்தனியாக போராடுவதற்கு பதிலாக வீதிக்கு இறங்கி போராடி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.

பிற செய்திகள்

Leave a Reply