யாழ். பல்கலையில் நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறியின் திசைமுகப்படுத்தல் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறியின் ஐந்தாம் அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் அறிமுக நிகழ்வு இன்று முற்பகல் 9.30 மணிக்கு, கலாசாலை வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந் நிகழ்வில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பதிவாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறிக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிகழ்நிலையிலும் கலந்து கொண்டனர்.

நுண்நிதி துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இக் கற்கைநெறி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

ஒரு வருட காலத்தைக் கொண்ட இந்தக் கற்கைநெறியில் கற்பதற்கு வங்கித்துறைப் பணியாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் , நிதி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் உட்படப் பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கற்கை நெறியானது அவர்களின் நுண்நிதி பற்றிய அறிவினை மேம்படுத்த உதவுவதோடு, அவர்களது பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும்.

பிற செய்திகள்

Leave a Reply