வடக்கில் சிங்கள மொழி தெரிந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்! இராமச்சந்திரன் வேண்டுகோள்

வடக்கு மாகாணத்தில் இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 500 ஆசிரியர்களை உருவாக்கியுள்ளேன் என இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளரும் ஜெர்மனிய குடிவரவு குடியகல்வு சட்ட ஆலோசகருமான தேசமானிய எம்.டி.எஸ். இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்றையதினம் சனிக்கிழமை இந்து பௌத்த கலாசார பேரவையினால் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழியான சிங்கள மொழி மூலக் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இந்து பௌத்த கலாசார பேரவை முன்னெடுத்த சிங்கள மொழி கற்கை நெறிமூலம் ஐநூறு ஆசிரியர்களை உருவாக்கியுள்ளோம்.

நாம் உருவாக்கிய ஐநூறு ஆசிரியர்களும் 5ஆயிரம் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

எங்களால் முடிந்தவரை பண உதவிகளை வழங்கி ஒரு சிறு பகுதியை மட்டும் உங்களிடமிருந்து பெற்று உங்களை சமூகத்தில் இரு மொழிகள் தெரிந்த மனிதர்களாக உருவாக்கியுள்ளோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் தகுதியான ஒருவரை அழைத்து அவரின் கையால் மாணவர்களுக்கு சான்றிதழை வழங்க வண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது அதற்கு தகுதியானவர் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பதை நான் தெரிவு செய்தேன்.

ஏனெனில் மிகவும் சாதாரணமான எளிமையான சிரேஷ்ட சட்டத்தரணி கடந்த காலங்களில் பல அமைச்சுக்களை வழிநடத்தியதோடு இந்த நாட்டினுடைய ஜனாதிபதி நீதித்துறைக்கு பொருத்தமானவர் என கருதி அவரை நீதி அமைச்சர் ஆக்கினார் ஆகையால் அவரை அழைத்து வந்தேன்.

ஆகவே அவரை இங்கு அழைத்து வந்து சான்றிதழ் வழங்கும் வைபவத்தை நடத்தியதை நான் பெருமையாக கருதும் அதோடு அதனிலும் பார்க்க மாணவர்கள் அவரிடம் சான்றிதழ் பெற்றமை ஒரு மகிழ்வான தருணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசஅதிபர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply