தற்போது காணப்படும் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக நாளைய தினம் இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் வட பிராந்திய சாலைகள் அனைத்தும் பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் சார்பாக நடத்துனர் அருளானந்தம் அருள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நாட்டின் சூழ்நிலையிலே அத்தியாவசிய சேவையாக கருதக்கூடிய இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு அரச ஊழியர்களும் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மரியாதைத் தன்மை இழந்த மன உளைச்சலுக்கு உள்ளான சம்பவங்கள் நடந்துள்ளன.
அரச ஊழியர்களுக்கு நற்பெயரினை தேடித்தந்த காலத்தினை விட தற்போது கூனி குறுகி நிற்கின்ற நிலை உருவாகியுள்ளது.
வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது.
பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில், பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம். வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கவில்லை.
எனவே எங்களுக்கு எரிபொருளினை தருவதற்காக ஒத்துழைப்பினை வழங்குபவர்கள் நேரத்தினை கருத்திற்கொண்டு, கடமை நேரம் மாலை 6.00 மணிக்கு பிற்பாடு எரிபொருளினை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் ஆகியோர் எங்களது தேவையின் அவசியத்தினை புரிந்துகொள்ளும் வரை, நாளைய தினம் வடபிராந்திய சாலைகள் அனைத்தும் பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளவதற்காக ஆயத்தமாக உள்ளோம்.
இதனால் ஏற்பாடு அசௌகரியங்களுக்கு இலங்கை போக்குவரத்துச்சபை மன்னிப்பினை வேண்டி நிற்கின்றோம். – என்றார்.
பிற செய்திகள்





