மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கடந்த 16ம் திகதி பெற்றோல் வந்ததாகவும், 6600லீட்டர் எனவும், அன்றைய தினமே பெற்றோல் விற்று தீர்ந்து விட்டது எனவும், மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் சமிந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொட்டகல இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மூலம் 6600 லீட்டர் பெற்றோல் வரப்பட்டது,
ஹட்டன் நகரில், இடம்பெறும் மண்ணெண்ணெய் கோரிய ஆர்ப்பாட்டத்தால் அந்த பவுசர் திரும்பி கொட்டகலக்கே சென்று விட்டது.

அது மட்டுமன்றி, சுமார் 300க்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகள், கடந்த 17ம் திகதி முதல், இன்று வரை, மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் தரித்து நிற்கும் நிலையில் உள்ளது.
இதனால் முச்சக்கர வண்டி சாரதிகளும், ஹட்டன் மஸ்கெலியா நோட்டன் வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பேருந்து சேவையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் பலர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர் என்று மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் சமிந்த .த. சில்வா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்





