கொழும்பு கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே மாட்டோம் என்றும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும்  ECT  முனையத்தின் நிர்மாணப் பணிகளை கடந்த 25ஆம் திகதி பார்வையிட்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையமும், அதன் செயற்பாடுகளும் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான முனையமாக முழுமையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சில தொழிற்சங்கங்களும், தனிநபர்களும் இந்த முனையம் தொடர்பில் வெளியிடப்படும் பொறுப்பற்ற அறிக்கைகளை நிராகரிப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply