போக்குவரத்து சேவைகள் முற்றாக முடங்கும் நிலை- விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில்

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போக்குவரத்து சேவைகளும் முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பேருந்து கட்டணம் திருத்தப்படவில்லை எனில்,  செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply