பாண்டிருப்பில் திருமண நிகழ்வின்பொது இடம்பெற்ற முன்மாதிரியான செயல்!
பாண்டிருப்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் முன்மாதிரியான நிகழ்வொன்று இடம்பெற்றது.
மணமகனின் நண்பர்கள் இணைந்து புதுமணத் தம்பதியினருக்கு வீட்டு தோட்டத்துக்கு உரிய பயிர் கன்றுகள், விதைகள் மற்றும் பயன் தரும் பழக்கன்றுகளை நன்கொடையாக வழங்கி வைத்தனர்.
நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார நெருக்கடியில் சுய பொருளாதாரத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டியதும், வீட்டுத் தோட்டங்களை செய்ய வேண்டியதும் அவசியமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் பல்வேறு செயற்பாடுகள் பொது அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வீட்டு தோட்டத்தினை ஊக்குவிக்கும் வகையிலும்,மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் புதுமணத் தம்பதிக்கு மணமகனின் நண்பர்கள் இவ்வாறு பயிர் கன்றுகளையும் பழக்கன்றுகளையும் வழங்கி வைத்த மை குறிப்பிடத்தக்கதாகும்.







