
மட்டு நகரில் வாகனங்களுக்கு அனுமதி பத்திர முறைமையில் எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி சுமுகமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் கல்முனை மாநகர சபையில் நேற்று (25) மாலை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில்
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் சுமார் 45ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், தேவையான ஒவ்வொரு குடும்பமும் மாதமொரு முறையாவது மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசேட குடும்ப அட்டையை மாநகரசபை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து வழங்குதல்.
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் பாவனையிலுள்ள வாகனங்கள் அனைத்துக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
முதற்கட்டமாக அனைத்து முச்சக்கர வண்டிகளும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும். தரப்படும் நாட்களில் வருகைதந்து மோட்டார் திணைக்கள பதிவு புத்தகத்தின் பிரதியை சமர்ப்பித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களும் ஏனைய வாகனங்களும் பதிவு செய்யப்படும்.
கடற்றொழில், விவசாயம், கைத்தொழில் துறைகளுக்கும் உணவு பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தேவையானளவு மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை அந்தந்த திணைக்களங்களின் சிபாரசுகளுக்கேற்ப விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல்.
சுகாதாரத்துறையினர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோக நடவடிக்கைகளில் நிச்சயமற்றதன்மை காணப்படுவதால் தமக்குக் கிடைக்கின்ற எரிபொருள்களை கொண்டே மக்களுக்கு அவற்றை விநியோகிக்க முடியுமாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிற செய்திகள்





