
நாட்டில் தற்போது எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் , மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், எரிபொருள் பெறுவதற்காக மக்கள் நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்து நிற்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில், புத்தளத்தில் எரிபொருள் இன்றி இரவு நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்லுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் புத்தளம் நகரில் உள்ள நோயாளிகளுக்கு தனிநபர் ஒருவரால் இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மது பௌசர் என்பவரே மேற்படி இலவச போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
எரிப்பொருள் பிரச்சினை தீரும் வரை , இரவு நேரங்களில் மாத்திரம் இவ்வாறு இலவசமாக வைத்தியசாலைக்கான பயண சேவையை செய்வதற்கு , தான் எதிர்பார்த்துள்ளதாக முஹம்மது பௌசர் தெரிவிக்கின்றார்.
எனவே, புத்தளம் நகரில் உள்ளவர்கள் மாத்திரம் 0722999889 , 0766369889 எனும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியும்.
இவருடைய இந்த சேவைபற்றி சமூக வளைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் நிலையில், அனைவரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்





