பொலன்னறுவையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது! 

பொலன்னறுவை, புதிய நகரப்பகுதியில் கேறள கஞ்சாவுடன் 39 மற்றும் 38 வயதுடைய இருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பிரதேச கேரள கஞ்சா முகவரும் அவரது உதவியாளரும் என்பதுடன் இவர்களிடமிருந்து 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் பொலன்னறுவ பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply