நாட்டிலுள்ள வெதுப்பகங்கள் அனைத்தும் மூட வேண்டிய நிலை-அசேல சம்பத் எச்சரிக்கை!

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிலுள்ள வெதுப்பகங்கள் அனைத்துமே மூட வேண்டிய நிலை ஏற்படும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இலங்கையில் வரலாற்று காணாத விதத்தில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது அதாவது விடியற்காலை 2 மணி அளவில் விலை அதிகரித்து உள்ளனர்.

கடந்த காலங்களில் காஞ்சன விஜேசேகர அவர்கள் கூறியது எரிபொருள் விலை உயர்வினால் ஒரு ரூபாயினால் நஷ்டம் ஏற்படும் என்று விடியற்காலையில் விலை உயர்த்துகின்றனர் 50 ரூபாவால் அவற்றில் 1 ரூபாய் நட்டம் ஏற்படின் மீதி 49 யாரிற்கு செல்கிறது என கேள்வியெழுப்பினார்.

எரிபொருள் விலை உயர்வு ஏற்படும் ஒரு பக்கம் ஏனைய அனைத்து பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் மனசாட்சி இன்றி இவ் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

தம்புள்ள இருந்து மரக்கறி கொண்டு வர முடியாது. எனவே நாங்கள் கூறுவது வெதுப்பகங்கள் நடாத்தி செல்வதற்கு ஏற்ற வகையில் விலைகளை நிர்ணயுங்கள் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply