துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் பலி

கொழும்பு, ஜுன் 27

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத நிலைய வீதி, பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீதியில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 வயது சிறுவனும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply