எரிபொருள் அட்டையுடன் ‘ரோக்கன்’ நடைமுறை! 

யாழ். மாவட்டத்தில் அடுத்த மாதம் தொடக்கம் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறும். அமைச்சர் அறிவித்த ரோக்கன் நடைமுறையை அதனுடன் இணைத்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

எரிபொருள் அட்டைக்கு விநியோகம் மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் யாழ். மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ரோக்கன் நடைமுறையை எரிபொருள் விநியோகத்தில் பின்பற்ற அமைச்சர் காஞ்சன நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் எந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது என்று மாவட்டச் செயலரிடம் கேட்டபோது,
‘இரண்டும் இணைந்த நடைமுறையைப் பின்பற்ற எதிர்பார்க்கின்றோம்’ என்று மாவட்டச் செயலர் பதிலளித்தார்.

Leave a Reply