சேமிக்கப்பட்ட பெற்றோலால் பெற்றோர் உயிரிழப்பு; பிள்ளைகள் ஆபத்தான நிலையில்! 

கொழும்பு மாவட்டத்தின் கஹதுட்டுவ – பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது இரண்டு பிள்ளைகளும் ஆபத்தான நிலைமையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த காயமடைந்த 41 வயதான கணவன் மற்றும் 38 வயதான மனைவி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை  பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இவர்களது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களது வீட்டில் கொள்கலனில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெற்றோலே தீ விபத்துக்கு காரணம் என்று தாம் சந்தேகிப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply