மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிப்பு!

இன்று தொடக்கம் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது 2 மணித்தியாலங்கள் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு இந்த வாரம் ஒரு மணி நேரத்தால் அதிகரிக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் ஆக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஏ முதல் டபிள்யூ வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிசி வலயங்களில் எதிர்வரும் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளை தவிர ஏனைய நாள்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

எம், என், ஓ, எக்ஸ், வை, சட் வலயங்களில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply