
பாவனையிலிருந்து மீளப்பெறப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகள் வைக்கப்பட்டிருந்த மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு தொகுதி மருந்துகள் அழிவடைந்துள்ளன.
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நேற்று மாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருந்துக் களஞ்சியத்துக்கான பிரதான ஆழிப் பகுதியில் (மெயின் சுவிட்ச்) ஏற்பட்ட மின் ஒழுக்கால் ஏற்பட்ட தீ விபத்திலேயே இவை அழிவடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





