
அமைச்சரவையால் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட 21ஆம் திருத்தச் சட்டவரைவு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மீளவும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
22ஆம் திருத்தச் சட்டம் என்று அந்த வரைவு மாற்றப்பட்டுள்ளதுடன், உள்ளடக்கத்திலும் சில விடயங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால் அமைச்சரவையின் அனுமதிக்காக மீண்டும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச் சட்ட வரைவும் 21ஆம் திருத்தச் சட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், நீதி அமைச்சர் விஜயதாஸ சமர்ப்பித்த சட்டவரைவு 22ஆம் திருத்தச் சட்ட வரைவு என்று மாற்றி அமைச்சரவையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.





