இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற இரு முதியவர்கள் இன்று அதிகாலை தமிழகத்தில் மயங்கிய நிலையில் கரையோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மன்னாரில் இருந்து புறப்பட்ட இருவரே இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியே இவ்வாறு அகதிகளாக தமிழகம் சென்றடைந்தபோதும் கரையில் இயலாமை காரணமாக மயக்கமுற்று காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மயக்கமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.
வைத்திய நடவடிக்கையின் பின்னர் மண்டபம் முகாமிற்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.
பிற செய்திகள்





