
எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிக்குப் பின்னர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 6 ஆம் திகதிக்குப் பின்னர் 1 லட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள 80 ஆயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.





