
கொழும்பு, ஜுன் 27
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி போன்றவற்றினால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடினர்.





