போதையற்ற நாடு; யாழில் விழிப்புணர்வு நாடகம்!(படங்கள் இணைப்பு)

யாழில் இன்றைய தினம் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றிருந்தது .

அந்தவகையில் இன்று யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் ,ஆற்றிகைக்குழு இளைஞர்களால் ”புதிய வாழ்வு ,புதிய நாடகம் ” என்ற தலைப்பில் நாடகம் நடாத்தப்பட்டிருந்தது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினால் யாழ் . மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது .

அத்துடன் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபட முடியாத வேதனையா ?24 மணி நேரமும் இளையோரை காத்திட நாம் தயார் ! என்ற தொனிப்பொருளில் அதற்கான உடனடி அழைப்பு இலக்கமாக 1927 என்னும் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

பிற செய்திகள்

Leave a Reply