யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

<!–

யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்! – Athavan News

யாழ்ப்பாணம் – அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க இருந்த மண்ணெண்ணையை ஏனையவர்களுக்கு விநியோகிக்க இராணுவம் பதிவுகளை மேற்கொண்டமையினால் அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும் ஏனையோருக்கு வழங்க முடியாது என்றும் பலர் கூறியபோதும் அதனை பொருட்படுத்தாது இராணுவத்தினர் பதிவுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக கோப்பாய் பிரதேச செயலருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச செயலர் இராணுவத்தினருக்கு மண்ணெண்ணெய் விநியோகம் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதனை தொடர்ந்தும் பதிவு நடவடிக்கைகளை இராணுவத்தினர் இடை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply