
அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ச அருங்காட்சியகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெற்றோரின் நினைவாலயத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது இடிக்கப்பட்ட நினைவாலயத்தை புனரமைப்பதற்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதற்காக பொறுப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரியினால் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொருத்தமற்ற வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதற்கமைய, கல், மணல், சீமேந்து, மரப்பலகைகள் மற்றும் நிதியுதவி என எவ்வகையிலும் பெற்றுக் கொண்டு அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என உயர் பொலிஸ் அதிகாரியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை





