காணாமல்போன 11 வயதான சிறுவன் சடலமாக மீட்பு

குளியாப்பிட்டிய,

காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சிறுவனின் சடலம் கடந்த 24ஆம் திகதி வீட்டின் அருகில் காணப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

குளியாப்பிட்டிய, இஹல கோமுகொமுவ பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சஷிகுமார் யெஹான் அகலங்க என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சிறுவன் கடந்த 21 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தையின் தாயும் உறவினர் ஒருவரும் வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரி வருகிறது.

இந்நிலையில், குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் தெரிவித்தனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply