தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தொடரும் விசாரணைகள்

ஹோமாகம,ஜுன் 27

ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் மாடி வீடு ஒன்றின் கீழ் மாடியில் ஏற்பட்ட 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ பரவலில்  தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின்  இரு மகள்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு வயதுடைய பாடசாலை மாணவியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த அறையில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டு நால்வரும் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவனும் மனைவியும் உயிரிழந்தனர்.
இவர்களின் இரு பிள்ளைகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹோமாகம மாகமனையைச் சேர்ந்த லசந்த புத்திக ரணசிங்க (47) மற்றும் அவரது மனவியான நளிகாதேவி ( 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

19 வயதான அவர்களின் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறு வயது மகளின் உடல் நிலை சாதாரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply