விவசாயிகளுக்கு மண்ணெண்னை வழங்குவதில் குழப்பம்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்காக இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இருப்பினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும்இ ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.

விவசாயிகளுக்கு மடடும் மண்ணெண்ணெய் என்ற போதும் தொடர்ந்தும் இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்துள்ளனர். அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளருக்கும்இ புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மண்ணெண்ணெய்யை விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளதாகவும் இதனால் ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது எனவும் இராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

பிரபாகரனின் பணம் எங்கே? வெளிவந்த
மர்மங்கள்!

நாட்டிலுள்ள வெதுப்பகங்கள் அனைத்தும் மூட வேண்டிய நிலைஅசேல சம்பத் எச்சரிக்கை!
இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
உலகில் அதிக பணவீக்கம் கொண்ட
நாடாக இலங்கை பதிவு!

ஒமிக்ரோன் BA.5 திரிபு தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை


Facebook:https://www.facebook.com/samugamweb


Instagram:https://www.instagram.com/samugammedia/
• Twitter:https://twitter.com/samugammedia
• Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

 

Leave a Reply