யாழில் விஞ்ஞான அறிவியல் கழகம் உருவாக்கம்!

நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுவழிகளை உருவாக்க வேண்டும் இதற்கு தூய நிலையிலுள்ள கண்டுபிடிப்புக்களை அல்லது புத்தாக்கங்களை உருவாக்கக்கூடியவர்களை எதிர்பார்த்துடன் .சிந்திக்கக்கூடிய சமூகம் ஒன்றினை உருவாக்குவதற்காக விஞ்ஞான அறிவியல் கழகம் ஒன்றினை உருவாக்க உள்ளோம் என மருத்துவர் நாகநாதன் தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியல் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

அவர் மேலு தெரிவிக்கையில் ,

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு மாற்று வழிகளை உருவாக்க விஞ்ஞான அறிவியல் கழகம் ஒன்றினை ஆரம்பிக்க உள்ளோம் .இக்கழகத்திற்கு தூய நிலையிலுள்ள கண்டுபிடிப்புக்களை அல்லது புத்தாக்கங்களை உருவாக்கக்கூடியவர்களை எதிர்பாக்கின்றோம் .

தற்போதைய சூழ்நிலையில் வாழ வேண்டும் எனில் கட்டாயம் சிந்திக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது ,இதற்கு மாற்று வழி என்ன என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது .

விஞ்ஞானம் வளர்ந்த போதிலும் அதன் அறிவு முடங்கி கிடக்கிறது .இதனை எதிர்கால சந்ததியினர் சிந்திக்க வேண்டும் .

நாங்கள் நாங்களாகவே வாழக்கூடிய ஒரு சுய சார்பினை உருவாக்கக்கூடியதாகவும் ,மருந்து உற்பத்தி போன்ற அனைத்தையும் நாங்களாகவே உற்பத்தி செய்கின்ற அடிப்படை பொறிமுறையினை உருவாக்க வேண்டும் .இதனால் அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கு நன்மை ஏற்படும் .

ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்காட்டான நாடாக எமது நாடு இருக்க வேண்டும் .தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக எரிபொருளே உள்ளது .இதனை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் அனைத்து பொருட்களின் விலைகளையும் ஓரளவிற்கு குறைக்க முடியும் .எனவே ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply