பொருட்களை விநியோகிக்க எரிபொருள் இல்லை; கடும் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து துறைமுகத்தில் உள்ள கொள்கலன் போர்ட்டர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply