கட்டுநாயக்கவில் ஒருவர் குத்திக் கொலை; கத்தியுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க, மொலபாறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கஹவத்தை யாயின்ன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply