
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ் தொடருக்கு முன்னதாக காலி கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன.
காலி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள விநியோக நிலையத்தில் கடந்த 20 நாட்களாக எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருப்பதாக காலி குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.கிரிக்கெட் ஸ்டேடியத்தைச் சுற்றி லிட்ரோ கேஸ் மற்றும் லாஃப்க்ஸ் கேஸ் சிலிண்டர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் காரணமாக காஸ் சிலிண்டர்களை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதேசவாசிகள், தமக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கினால் மாத்திரமே வெளியேறுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.





