தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மொழி பெயர்ப்பு திறன் அவசியம் – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்!

தேசத்தை கட்டியெழுப்புவதற்கு மொழி பெயர்ப்பு திறன் மிகவும் அவசியமானது என அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஜோசப் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழர் என்ற இனம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.இதற்காக பல வழிகளில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.அரசை வீட்டுக்கு அனுப்புமாறும் காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

அவர்களுக்கு எமது நிலவரங்களை தெரியப்படுத்த இந்த மொழிபெயர்ப்பு அவசியமாகிறது.மொழிபெயர்ப்பு தற்போது பல்கலைக் கழகங்களிலும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது.அதனை ஒரு தொடர்ச்சியான செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.

பல்வேறு விடயங்களை அடிப்படையிலிருந்து நாம் அறிவதாக இருந்தால்,நாம் பல நூல்களை மொழிபெயர்க்க வேண்டும்.இவ்வாறான புத்தங்கள் பெரிய பாதையைக் காட்டும்.

ஆகவே தான் மொழியப்பெயர்ப்பு என்பது ஈழத்தமிழர்களின் பிரிக்க முடியாத பகுதி.வெளியுலகம் எம்மை பற்றி என்ன சொல்கிறது என்று அறிவதற்கு மொழிபெயர்ப்பு என்பது அவசியம்.இதற்காக நாம் பலமான அரசை வைத்திருக்க வேண்டும்.ஆனால் இப்போது அந்த அணி இல்லை.இதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தரப்புகள் எடுத்தாக இல்லை என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply