கடற்படையின் கெப் வாகானம் டிப்பருடன் மோதி கோர விபத்து! – மூவர் படுகாயம்

திருகோணமலை – ஹபறன பிரதான வீதியின் கித்துல் ஊற்று என்னுமிடத்தில் கடற்படையினர் சென்ற கெப் வாகானம் டிப்பருடன் மோதியதில் மூன்று கடற்படை வீரர்கள் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்படை கெப் வாகானம், கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற வேளையில், கந்தளாய் கித்துல் ஊற்று என்னுமிடத்தில் முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த கடற்படை வீரர்கள் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply