எரிபொருள் பிரச்சினை தீர்வுக்கு உதவி பெற காஞ்சனவுடன் சென்ற ஹாபிஸ் நஸீர்

கொழும்பு,ஜுன் 27

வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹம்மட் ஆகியோர் எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு காண்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக கத்தாருக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கத்தார் ஜனாதிபதியிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே இலங்கை தூதுக்குழுவொன்று கட்டாருக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கமையவே வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடற்துறை அமைச்சர் நசீர் அஹம்மட் ஆகியோர் கத்தாருக்கு பயணமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply