
அக்குரஸ்ஸ,ஜுன் 27
அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் கருதுகின்றனர்.
மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சந்தேகநபர், கொல்லப்பட்ட நபரின் வீட்டுக்கு அண்மையில் வசித்துவருபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.





