யாழ்ப்பாணத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 6 பேர் கொண்ட குழு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தாயார் சமூகம் மீடியாவுக்கு தெரிவிக்கையில்,
என்னுடைய மகள் கலைவாணி, என்னுடைய வளர்ப்பு மகள், அதாவது என் தங்கை மகள், அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வைத்தியசாலைக்கு செல்ல ஆடைகள் வாங்குவதற்காக யாழ்ப்பாணத்திற்கு காலை 9 மணியளவில் சென்றிருந்தார். காலை 10 மணியளவில் தொலைபேசியில் எனது மகளிடம் இருந்து அழைப்பு வந்தது.
”அம்மா என்னை கடத்தி விட்டார்கள். நான் தப்பி ஓடுகிறேன். என்னை காப்பாற்றுங்கள்” என்று, எனக்கு ஏது செய்வதென்று தெரியவில்லை, எங்கு நிற்கின்றீர்கள் என்று வினவிய பொழுது, தான் ஒரு வீதியில் நிற்பதாகவும், அது ஆள்நடமாட்டம் இல்லாத இடம் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அத்தோடு, நாங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றோம். அங்கு சென்றவுடன் மறுபடியும் அழைப்பு வந்தது, குரல்கள் நடுங்கியபடி, நான் எங்கே நிற்கின்றேன் என தெரியவில்லை அம்மா, நான் காடு ஒன்றின் மத்தியில் நிற்கின்றேன், என்னை காப்பாற்றுங்கள் என்று அழுதுள்ளார்.

அத்தோடு பொலிசார் தொலைபேசியை வாங்கி, பயப்பிட வேண்டாம் என தைரியம் கொடுத்ததன் பின், தான் கிளிநொச்சியில் நின்று கொண்டு இருக்கின்றேன் என சொன்னார். பின்னரும் அழைப்பு நின்று விட்டது.
சிறிது நேரம் கழித்து அவராகவே அழைப்பை ஏற்படுத்தி, தான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வந்து விட்டேன் அம்மா என்றார். பொலிஸ் பாதுகாப்பில் சிறிது நேரம் இருந்தார்.
பின்னர் சிறுமியின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பை ஏற்பத்திய பெண் பொலிசார் ஒருவர், சிறுமிக்கு உடல் நிலை சரியில்லை, நாங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றோம் என தெரிவித்தார்.
இதையடுத்து, நாங்களும் விரைந்து வைத்தியசாலைக்கு சென்றோம். அடிவயிற்று நோவுடனும், கை, கால்களில் பலத்த காயங்களுடனும் காணப்பட்டார். உடல் இயலாத நிலையிலும் காணப்பட்டார்.
என் பிள்ளையை கயவர்கள் சிதைத்து, அலங்கோலப்படுத்தி விட்டார்கள்.
இச் சம்பவம் பொலிஸ் வரை சென்றும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, வைத்தியர்களின் முடிவிலும் பிள்ளை 6 பேரால் சீரழிக்கப்பட்டதென்று தெரியவந்துள்ளது.
உடல் முழுவதும் காயங்கள், பிள்ளை தற்பொழுது மன உளைச்சலுக்கு ஆளாகி, பிதற்றுகின்றாள்.
தகப்பன் இல்லாத நிலையில், தாய் வெளிநாட்டில் உள்ளார். என்னோடே பிள்ளை இருந்து, வளர்ந்தது.
பொலிஸாரால் கயவர்கள் அடையாளம் காட்டப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய கயவர்கள் எங்கள் வீட்டு வாசலில் வாளுடன் வந்து எங்களை மிரட்டுகின்றனர்.
இதற்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். இவர்களுடன் முன் பின் பகை கூட இல்லை.
என் தங்கை மகனை கூட அடித்து துன்புறுத்தினார்கள். அதற்குகூட நாங்கள் ஒன்றும் கூறவில்லை. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியும், அதற்கும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
எங்களுடைய பெண் பிள்ளையை நாங்கள் எங்கே கொண்டு செல்வது, என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கலைவாணியின் வளர்ப்பு தாயார் கதறினார்.
பிற செய்திகள்





