
நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்





