திருகோணமலை ஹபறன பிரதான வீதியின் கித்துல் ஊற்று என்னுமிடத்தில் கடற்படையினர் சென்ற கெப் வாகனம் டிப்பருடன் மோதியதில் மூன்று கடற்படை வீரர்கள் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடற்படை கெப் வாகானம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற வேளையில் கந்தளாய் கித்துல் ஊற்று என்னுமிடத்தில் முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





