மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல், விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து!

<!–

மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல், விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து! – Athavan News

மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அருண ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமத்தொழில் வளர்ச்சி குறித்து அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாது எடுக்கும் முடிவுகள் காரணமாக மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் முற்றிலும் பயிர் செய்கையில் இருந்து விலகிச் செல்வதை நிறுத்த முடியாது போகும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply