புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தம்மிக்க பெரேராவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.முதலீடு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அமைப்பதற்கான அரசிதழ் ஒன்று முன்னதாக வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கு மாற்றியமைத்து புதிய வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு வெளியிட்டார்.
வர்த்தமானியின் பிரகாரம் பின்வரும் நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
1.இலங்கை முதலீட்டுச் சபை
2.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு
3.கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டம்
4.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
5.கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்
6.டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்
7.தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்








