மூதூர் – வீரமாநகர் கிராமத்தில் வீடொன்றின் யன்னலை உடைத்து நேற்றிரவு உள் நுழைந்த திருடன் காசு நகை மற்றும் பெறுமதியான பொருட்கள் எவற்றையும் திருடாது காலியான எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய நாட்களில் இது போன்ற மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வீரமாநகர் மற்றும் உப்பூறல் பகுதிகளில் வசிக்கும் சிலர் வெற்றுச் சிலிண்டர்களுக்கு பத்தாயிரம் தொடக்கம் இருபத்தைந்தாயிரம் வரை கொடுத்துக் கொள்வனவு செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரவுப் பிரச்சனைகள் காரணமாக சம்பவம் தொடர்பான போலீஸ் முறைப்பாடுகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை பிரதேச க்கள் கவலை வெளியிடுகின்றனர்.

பிற செய்திகள்





