இ.போ.ச பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது -பேரூந்து சேவைகள் வழமைக்கு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிபுறக்கணிப்பு இன்று காலை கைவிடப்பட்டுள்ளது.

அதிகாலையில் டிப்போக்கு வருகை தந்து,தங்களுடைய போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு,வீட்டிலிருந்து டிப்போக்கு வருவதற்கு கூட எரிபொருள் இல்லை.

இது தவிர அரச சேவையாளர் என்ற மரியாதைகு கூட இல்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவமதிக்கப்படுகின்றோம்.ஆகவே தமக்கான எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய ஊழியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சபையின் முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையை அடுத்து ,போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோரின் பயணத்துக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று காலை 9 மணிமுதல் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply