தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
இதனை கருத்திற் கொண்டு தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களில் பலர் துவிச்சக்கர வண்டி மூலமாக அலுவலகத்துக்கு செல்கின்றனர். இன்றும் (28) அலுவலகத்தை நோக்கி சென்றார்கள்.
பெற்றோல் தட்டுப்பாடு நிலைமையினை கருத்திற்கொண்டே முன்மாதிரியாக செயற்பட்டு அரச சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தை அண்மித்த உத்தியோகத்தர்களே இவ்வாறு துவிச்சக்கர வண்டி மூலமாக தங்களது போக்குவரத்து சேவையை பெற்றோல் செலவின்றி இலகுவாக பயன்படுத்தி வருகிறார்கள்.


பிற செய்திகள்





