தலையை வெட்டி நில்வலா கங்கையில் வீசிய நபர் கைது

அக்குரஸ்ஸ, ஜுன் 28

அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை கொலை செய்து விட்டு, அவருடைய தலையை வெட்டி நிலவலா கங்கையில் வீசிய சம்பவத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் பலகாவல பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 24 வயது இளைஞர் ஆவார். இதேவேளை, குறித்த நபர் நிலவலா கங்கையில் வீசிச் சென்ற நபரின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply